‘நோ சூடு நோ சொரணை’.. நித்தி போட்டோவுடன் கல்யாண பேனர்..! குதூகலிக்கும் வாலிபர்கள்..!

By Manikandan S R S  |  First Published Feb 10, 2020, 1:39 PM IST

குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைந்த நித்தி கூறும் கைலாச நாடு எங்கிருக்கிறது என்பது தெரிய வந்தால் அங்கு செல்ல தயாராக இருப்பதாக  வாலிபர்கள் தெரிவித்தனர். மேலும் நித்தி எப்போதும் குதூகலமாகவும் ஜாலியாகவும் இருப்பதாக கூறிய வாலிபர்கள், அவர் கூறும் ‘நோ சூடு நோ சொரணை’ என்கிற வாசகம் தங்களுக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 


தமிழ்நாட்டில் இருக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்தியானந்த சாமியார் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்கள் அமைத்து உள்ளார். பல கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருக்கும் இவரிடம் பல இளம்பெண்கள் சீடர்களாக இருக்கிறார்கள். இவர் மீது பாலியல் தொல்லை, இளம்பெண்கள் கடத்தல் போன்ற  குற்றசாட்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் இருக்கிறது. நித்தியானந்தா மீது வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால் எங்கோ தலைமறைவாக இருந்துகொண்டு அவ்வப்போது சில காணொளிகளை வெளியிட்டு நித்யானந்தா சர்சைககளுக்கு வித்திட்டு வருகிறார்.

Tap to resize

Latest Videos

undefined

நித்யனந்தாவிற்கு கடும் எதிர்ப்பு நிலவி வரும்போதும் அவருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் திருச்சி அருகே திருமண விழா ஒன்றில் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பேனரில் நித்தியானந்தாவின் புகைப்படத்தை அச்சிட்டு இளைஞர்கள் சிலர் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர். லால்குடி அருகே இருக்கும் பூவலூரைச் சேர்ந்த இளவரசன் மற்றும் விஜி ஆகிய தம்பதியினருக்கு திருமணம் நேற்று நடைபெற்றது.

நண்பர்கள் சார்பாக வைக்கப்பட்ட பேனரில் நித்தியானந்தாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். இதுகுறித்து பேனர் வைத்தவர்கள் கூறும்போது, வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்ததாகவும் அதன்காரணமாக தற்போது வைரலில் இருக்கும் நித்தியானந்தாவை பேனரில் அச்சடித்ததாகவும் தெரிவித்துள்ளனர். குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைந்த நித்தி கூறும் கைலாச நாடு எங்கிருக்கிறது என்பது தெரிய வந்தால் அங்கு செல்ல தயாராக இருப்பதாக அந்த வாலிபர்கள் தெரிவித்தனர்.

மேலும் நித்தி எப்போதும் குதூகலமாகவும் ஜாலியாகவும் இருப்பதாக கூறிய வாலிபர்கள், அவர் கூறும் ‘நோ சூடு நோ சொரணை’ என்கிற வாசகம் தங்களுக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். நித்தியை பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வரும் நிலையில் அவரது படத்துடன் திருமண வீடு ஒன்றில் பதாகையே வைக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மனநலம் பாதித்த சிறுமியை சீரழித்த கிழவன்..! 4 மாதங்களாக சிறை வைத்து கர்ப்பமாக்கிய கொடூரம்..!

click me!