திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள புலிவலத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (25), இவரது மனைவி லட்சுமி (27). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். சந்தோஷ் கடந்த 4 மாதங்களுக்கு முன் வேலைக்காக சென்னைக்கு சென்றார். லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். 4 மாதங்களாக கணவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என்பதால் பயந்து போன மனைவி கணவனை காணவில்லை என புலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கணவரை காணவில்லை, கண்டுபிடித்து கொடுங்கள் என புகார் கொடுக்க வந்த இளம் பெண்ணிடம் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, விசாரணை என்ற பெயரில் நள்ளிரவில் ரூமில் இருவரும் நீண்ட நேரமாக அடிக்கடி விசாரணை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள புலிவலத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (25), இவரது மனைவி லட்சுமி (27). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். சந்தோஷ் கடந்த 4 மாதங்களுக்கு முன் வேலைக்காக சென்னைக்கு சென்றார். லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். 4 மாதங்களாக கணவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என்பதால் பயந்து போன மனைவி கணவனை காணவில்லை என புலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்போது அங்கு பணியில் இருந்த ஏட்டு ராமர் (43), லட்சுமியிடம் புகார் மனுவை வாங்கி விசாரித்தார். விசாரணை என்ற பெயரில் அடிக்கடி காவல் நிலையத்திற்கு வரழைத்து ஆறுதல் கூறுவது போல் அன்பாக பேசிவந்தார். பின்னர் அவரது செல்போன் எண்ணையும் வாங்கிக்கொண்டு நள்ளிரவில் விசாரணை என்ற பெயரில் கடலை போட தொடங்கினார். இப்படி பல நாட்கள் பேசியதை தொடர்ந்து இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, நள்ளிரவில் விசாரணை என்ற பெயரில் வீட்டுக்கு வந்து இளம்பெண்ணுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். தனிமையில் இருக்கும் இளம் பெண் வீட்டுக்கு ஏட்டு ஏன் அடிக்கடி வருகிறார் என ஊர்மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து, நள்ளிரவில் இளம்பெண் வீட்டுக்கு சென்றதை பார்த்த பொதுமக்கள் வெளிப்பக்கமாக பூட்டு போட்டு வீட்டை பூட்டிவிட்டனர்.
உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை 100க்கு போன் செய்து ஏட்டு ராமரின் நள்ளிரவு ‘விசாரணை’ குறித்து தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் புலிவலம் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் கதவை தட்டி ஏட்டு ராமரை வெளியே வரும்படி கூறினர். அவர் வெளியே வந்து பார்த்தார். அப்போது ஊர் மக்களும், புலிவலம் போலீசாரும் அங்கு நின்றிருந்தனர். உள்ளே ரகசிய விசாரணை நடத்திய ஏட்டு ராமரையும், லட்சுமியும் வெளியே அழைத்து வந்தனர். இதை ஊர்மக்கள் செல்போனில் படம் பிடித்தனர். இதனால் ஏட்டு அதிர்ச்சி அடைந்து முகத்தை கைகளால் மூடினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.