பாஜக வேட்பாளர் இன்று மாலைக்குள் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் திருச்சி சூர்யா தொடர்ந்து எக்ஸ் தளத்தில் வேட்பாளர் குறித்து பதிவிட்டு வருகிறார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு முடிந்துள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலையும், தேர்தல் அறிக்கையையும் திமுக வெளியிட்டுள்ளது.
அதே போல் அதிமுகவும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துள்ள நிலையில் முழு வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது. இதே போல் பாஜக கூட்டணியில் பாமக, தாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்று மாலைக்குள் வெளியாகும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
undefined
இதனிடையே மதுரையை சேர்ந்த ராம ஸ்ரீனிவாசன் திருச்சி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ராம சீனிவாசனை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சர்ச்சையை கிளப்பி உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர் “ வேடந்தாங்கல் பறவை வேண்டாம் என்ற தலைப்பில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் அறிமுகம் இல்லாத வெளிமாட்டத்தை சேர்ந்த ராம சீனிவாசனை களமிறக்கினால் பாஜக டெபாசிட் இழக்கும். மாறாக மண்ணின் மைந்தரை களமிறக்கினால் திருச்சியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.. இப்படி பாஜகவின் உண்மை தொண்டன்” என்று குறிப்பிட்டிருந்தார்..
வேடந்தாங்கல் பறவைகள் வேண்டாம் ! pic.twitter.com/lH9kQSQkD2
— Trichy Suriya Shiva मोदी परिवार (@TrichySuriyaBJP)
இதை தொடர்ந்து ராம ஸ்ரீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில் திருச்சி சூர்யாவுக்கு பதிலடி கொடுத்திருந்தார். அவரின் பதிவில் “ அரசியல் பணியாற்றுவோர் மண்ணின் மைந்தனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த மண்ணுக்கான மைந்தனாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். நான் மண்ணுக்கான மைந்தன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று மற்றொரு பதிவை பதிவிட்டுள்ளார் திருச்சி சூர்யா. அவரின் எக்ஸ் வலைதள பதிவில் “ மண்ணுக்கான மைந்தனாக இருந்தால் போதும் என்றால் சோனியா காந்தியை பிரதமராக கூடாது என்று தடுத்தது ஏன்? சிஏஏ சட்டத்தை நிறைவேற்றிய கட்சியில் இருந்து கொண்டு சம்மந்தம் இல்லாத மண்ணுக்கு நான் மைந்தன் என உரிமை கொண்டாடலாமா? மண்ணின் மைந்தனின் குரலை புறக்கணிக்கலாமா? என்று பதிவிட்டுள்ளார்.
மீண்டும் வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்தை களமிறக்கிய திமுக தலைமை.. பின்னணி என்ன? பரபரப்பு தகவல்!