அப்போது ஒரு காளை வாடிவாசலில் இருந்து சீறி வந்த பிறகு திடல் அருகே சென்று கொண்டிருந்தது. அங்கு மின்சார வயர் ஒன்று அறுந்து கிடக்கவே அதையறியாத காளை மிதித்துள்ளது. இதில் காளை மீது மின்சாரம் பாயவே அது தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இருக்கிறது ஆவூர் கிராமம். இங்கு நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி சுற்றுவட்டார கிராமங்களில் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடத்துவதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கான உடல்தகுதி சோதனைகள் முடிந்து தேர்வான வீரர்கள் மற்றும் காளைகள் இன்று போட்டியில் பங்கேற்றனர்.
undefined
காலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியதும் ஒவ்வொரு காளைகளாக சீறி வரத் தொடங்கின. அவற்றை வீரர்கள் அடக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காளை வாடிவாசலில் இருந்து சீறி வந்த பிறகு திடல் அருகே சென்று கொண்டிருந்தது. அங்கு மின்சார வயர் ஒன்று அறுந்து கிடக்கவே அதையறியாத காளை மிதித்துள்ளது. இதில் காளை மீது மின்சாரம் பாயவே அது தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது.
117 தொகுதிகளில் பெண்கள்..! சட்டமன்ற தேர்தலில் அதிரடி காட்ட தயாராகும் சீமான்..!
காளை உயிரிழந்தது கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளரும் கிராம மக்களும் அதைச்சுற்றி நின்று கதறி அழுதனர். அந்த இடத்தில் கடந்த மூன்று நாட்களாகவே மின்சார கம்பி அறுந்து கிடப்பதாகவும் அதை சரிசெய்ய கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். காளை உயிரிழந்ததற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையேல் போராட்டம் நடத்த இருப்பதாகவும் ஊர்மக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
பேருலகு சமைக்க பெண்ணினமே எழு..! மகளிரை மெச்சிய மு.க.ஸ்டாலின்..!