திருச்சி லால்குடி அருகே பாஜக பிரமுகரின் காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.75 ஆயிரம் பணம், மோடியின் உருவம் பொறித்த கவர்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் மனுத்தாக்கல் வேகமாக நடைபெற்று வருகிறது.
undefined
இது ஒருபுறம் இருக்க, பறக்கும் படை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர வாகன தனிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
வேட்பாளருக்காக உறுதிமொழி எடுத்த ஆட்சியர்; வழிமொழிந்த சுயேட்சை - நாகையில் சுவாரசியம்
இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கல்லக்குடி சுங்கச்சாவடி அருகில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையின் போது பாஜக கொடி கட்டிய காரில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெகநாதன் மற்றும் சிவலிங்கம் என்பவரும் திண்டுக்கல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.
கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த கும்பல்; விசாரணையில் அடுத்தடுத்து வெளிவந்த உண்மைகள்
அந்த காரை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். இதில் உரிய ஆவணம் இல்லாமல் ரூபாய் 75 ஆயிரத்து 860 பணம் மற்றும் பிரதமர் மோடி உருவம் பதித்த கவர் இருந்ததைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்தனர்.