நான் ஒருவரை கூட கட்சியில் இருந்து நீக்கியதில்லை.. ஆனால் இனிமேல்?? கே.என்.நேரு வார்னிங்!

Published : Sep 02, 2025, 07:06 PM IST
KN Nehru

சுருக்கம்

தான் ஒருவரை கூட கட்சியில் இருந்து நீக்கியதில்லை என்று திமுகவின் மூத்த அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

KN Nehru Issues Strict Warning to DMK Functionaries! தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும் பாஜக, பாமக, நாம் தமிழர், விஜய்யின் தவெக என அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. திமுகவை பொறுத்தவரை அடுத்த முறையும் ஆட்சியை தக்க வைப்பதில் உறுதியாக உள்ளது. இதனால் 200 தொகுதிகளில் வெல்ல இலக்கு நிர்ணயித்துள்ளது.

கே.என்.நேரு பேச்சு

திமுக தலைமை மாநிலம் முழுவதும் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. திமுகவின் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுகவின் மூத்த அமைச்சரான கே.என்.நேரு திருச்சியில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ''நான் 30 ஆண்டுகாலம் திமுகவில் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறேன். ஆனால் ஒரே ஒருவரை கூட நான் கட்சியில் இருந்து நீக்கியதில்லை.

ஒருவரை கூட நீக்கியதில்லை

ஒரே ஒரு ஒன்றிய செயலாளரை கூட நான் நீக்கியதில்லை. ஒன்றிய செயலாளர்களுக்காக நான் காவல்துறையில் சண்டை போட்டு மீண்டும் ஒன்றிய செயலாளர்களை கொண்டு வந்திருக்கிறேன். இங்கு தகராறு வந்தபொதெல்லாம் அவர்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம். தயவு செய்து ஒன்றிய செயலாளர்கள் உங்கள் பணியை சரியாக செய்யுங்கள்.

சரியாக வேலை செய்யாதவர்களுக்கு வார்னிங்

நீங்க இவ்வளவு தூரம் சொல்றீங்கல்ல.. நீங்க என்ன செஞ்சிங்க என்று கேட்கிறீர்கள். அதெல்லாம் சரிதான். நாங்கள் பதில் சொல்ல தயாராக உள்ளோம். கழக செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் ஒன்றை கவனமாக கொள்ள வேண்டும். எங்களால் செயல்பட முடியவில்லை என்று நீங்கள் சொல்லி விட்டால் நாங்கள் வேறு ஆள் போட்டுக் கொள்கிறோம். அதில் ஒன்றும் மாற்றம் இல்லை. ஏன் என்றால் சரியாக வேலை செய்தாவர்களை வைத்துக் கொண்டு இழுக்க முடியாது. வேலை வாங்க முடியாது'' என்று தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருச்சியில் முதல்வர் இருக்கும் போதே பயங்கரம்! காவலர் குடியிருப்பில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொ*லை! அலறி ஓடிய பொதுமக்கள்
அடி தூள்.. இனி திருச்சியில் இருந்து நியூயார்க் பறக்கலாம்.. புதிய அறிவிப்பு