நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

By Velmurugan sFirst Published Jun 8, 2024, 11:00 PM IST
Highlights

நீட் தேர்வை முற்றிலுமாக ஒழித்து கட்டவேண்டும் என்பது தான் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு கட்சியின் நிலைப்பாடு என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதே போல தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் நூலகம் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் மணப்பாறை, திருவெறும்பூர், பாப்பாக்குறிச்சி ஆகிய பகுதிகளில் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.

Latest Videos

இதனை தொடர்ந்து திமுக மாவட்ட மாநகர இளைஞரணி சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள வரகனேரி பகுதியில் கலைஞர் நூலகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு திறந்து வைத்தார். மேலும் திருச்சி மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு நினைவு பரிசினை வழங்கி உரை ஆற்றினார்.

ரூ.40 கோடி வரியை செலுத்துங்கள்; பீடி சுற்றும் கூலி தொழிலாளிக்கு வந்த கடிதத்தால் அதிர்ந்துபோன குடும்பம்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஒவ்வொரு தொகுதியிலும் கலைஞர் நூலகம் திறக்க வேண்டும் என தமிழக முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி இன்று திருச்சி வரகனேரியில் கலைஞர் நூலகம் திறக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் பாம்பை கொன்று யூடியூபில் பீலா விட்ட வாலிபர்; வீட்டுக்கே சென்று தூக்கிய வனத்துறை

இந்தியா கூட்டணியில் உள்ள அனைவரும் சொன்ன ஒரே வார்த்தை நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிரான ஒரு திட்டம். உடனடியாக அதனை ஒழித்து விட வேண்டும் என கூறுகின்றனர். நீட் தேர்வை முற்றிலுமாக அகற்றுவதற்கு தமிழக முதல்வர் மு‌க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஒவ்வொரு நிலையிலும் முயற்சித்து வருகின்றனர். அவர்கள் வழியில் தொடர்ந்து நீட் தேர்வை நாங்களும் எதிர்ப்போம் என கூறினார்.

click me!