தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில், மொத்தம் ரூ.625.76 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.12.2022) திருச்சிராப்பள்ளி, அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.238.41 கோடி செலவில் 5635 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.308.29 கோடி மதிப்பீட்டிலான 5951 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 22,716 பயனாளிகளுக்கு ரூ.79.06 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழக விளையாட்டு வீரர்கள் உலகத்தோடு போட்டி போட வேண்டும் - முதல்வர் விருப்பம்
undefined
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, உயர்கல்வித் துறை ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு என மொத்தம் 238 கோடியே 41 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5635 முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
உயர்கல்வித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை என மொத்தம் 308 கோடியே 29 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 5951 புதிய திட்டப்பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார்.
சீனாவில் இருந்து கோவை வழியாக சேலம் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 79 கோடியே 6 இலட்சம் ரூபாய் மதிப்பில் 22,716 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.