தலை காத்த தலைக்கவசங்கள் !! குறைந்த உயிரிழப்புகள் !! அமைச்சர் தகவல் ..

By Asianet TamilFirst Published Aug 19, 2019, 5:10 PM IST
Highlights

தமிழகத்தில் தலைக்கவசம் அணிவது அதிகரித்து உள்ளதால் விபத்தினால்  ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்து உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .

போக்குவரத்து விதிகளை மீறிபவர்களுக்கு இ-சலான் மூலம் அபராதம் வசூலிக்கும் முறை திருச்சியில் அறிமுகம் செய்துவைத்தார் போக்குவரத்து துறை அமைச்சர் எம் . ஆர் .விஜயபாஸ்கர் .

அப்போது  பேசிய அவர் , தலைக்கவசம் அணிவது தற்போது அதிகரித்துள்ளதால் , விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 15 சதவீத அளவு குறைந்துள்ளதாக தெரிவித்தார் . மேலும் செங்கல்பட்டு முதல் திருச்சி வரை போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு தானாகவே அபராதம் விதிக்கக் கூடிய வகையில் கேமராவுடன் கூடிய கருவிகள் பொருத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

அப்போது அவரிடம் பால் விலையை தொடர்ந்து பேருந்து கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வருகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டனர் . அதற்கு அவர் அப்படி எந்த எண்ணமும் அரசுக்கு இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தார் .

click me!