600 அடி ஆழமாம்.. 70 அடிக்கு கீழே சென்ற குழந்தை... 22 மணி நேரமாக பதற வைக்கும் சுர்ஜித்..!

By Thiraviaraj RMFirst Published Oct 26, 2019, 4:23 PM IST
Highlights

குழந்தை சுர்ஜித் விழுந்த ஆழ்துளை கிணற்றின் ஆழம் 600 அடி. 26 அடியில் இருந்த குழந்தை சுர்ஜித் இப்போது 70 அடிக்கும் கீழே இருப்பதால் 22 மணி நேரமாக மீட்புபணிகள் நடந்து வருகிறது. 

நடுகாட்டுப்பட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை 183 பேர் கொண்ட குழு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 22 மணி நேரமாக குழந்தையை மீட்கும் பணிகள் இடைவிடாது நடைபெற்று வருகிறது. குழந்தையை மீட்க ஹைட்ராலிக் போன்ற கருவி செலுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சியும் பலன் தராவிட்டால் மாற்று வழியிலும் மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

 

இந்தக் கிணற்றை 5 ஆண்டுகளுக்கு முன் சுர்ஜித்தின் தந்தை விவசாயத்திற்காக தோண்டியுள்ளார். 600 அடிக்கு மேல் தோண்டியும் தண்ணீர் கிடைக்காததால் அப்படியே போட்டுவிட்டார். அவர்களது வயலில் சோளைத்தட்டை பியிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வயலில் விளையாடிக் கொண்டிருந்த சுர்ஜித் ஆள்துளை கிணற்றுக்குள் விழுந்துள்ளான். குழந்தை 30 அடி ஆழத்தில் இருக்கும்போதே பக்கவாட்டில் பள்ளம் தோண்டி மீட்க முயற்சிகள் தொடங்கின. ஆனால் 30 அடியில் பாறை குறுக்கிட்டதால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

 

ஒருவேளை அந்த பாறை இல்லாமல் இருந்திருந்தால் சுர்ஜித் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே மீட்கப்பட்டிருப்பான். இப்போது குழந்தை 70 அடிக்கு கீழே சென்று விட்டது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தை உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனையுமாக இருக்கிறது. 
 

click me!