அம்மா இருக்கேண்டா... அழுகாத சாமி... பாசப்போராட்டம் நடத்தும் சுர்ஜித்தின் தாய்..!

By Thiraviaraj RM  |  First Published Oct 26, 2019, 3:34 PM IST

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தின் தாய் நடத்தும் பாசப்போராட்டம் அனைவரையும் கலங்கடித்து வருகிறது. 


21 மணி நேரமாக குழந்தையை மீட்கும் பணிகள் இடைவிடாது நடைபெற்று வருகிறது. நாடே சுர்ஜித்துக்காக பிரார்த்தனை செய்து வருகிறது. இந்நிலையில் குழந்தையின் தாய் நடத்தும் பாசப்போராட்டம் காண்போரை கண்கலங்க வைத்து வருகிறது. 

முதலில் 26 அடி ஆழத்தில் இருந்த குழந்தை தற்போது 70 அடிக்கும் கீழாக சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தை பயப்படாமல் இருக்க தாய் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து பேச்சு கொடுத்துக்கொண்டே இருந்தனர். அப்போது குழந்தையின் தாய் கலாமேரி, ‘அழுகாத சாமி, அம்மா எப்படினாலும் உனைய மேல் எடுத்துறேன். அம்மா இருக்கேன் பயப்படாதே’ என கூறினார். அதற்கு குழந்தை சுர்ஜித் ‘ம்ம்’ என பதிலளித்தான்.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் குழந்தையை துணிப்பையை வைத்து மீட்க மீட்பு குழுவினர் முடிவெடுத்தனர். அதனால் மீட்பு படையினரின் வேண்டுகோளை ஏற்று தாய் கலாமேரி துணிப்பை தைக்கு பணியில் ஈடுபட்டார். ஆழ்துளை கிணற்றுக்குள் போராடிக்கொண்டிருக்கும் தனது மகன் பத்திரமாக மீட்கப்படுவான் என்ற நம்பிக்கையில் துணிப்பை தைக்கும் தாய் கலாமேரியின் புகைப்படம் வெளியாகி அனைவரையும் கண்கலங்க வைக்கிறது. தற்போது தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், மாநில மீட்புக்குழவை சேர்ந்த 53 பேர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். ஏற்கெனவே 10 க்கும் மேற்பட்ட குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தாயின் பாசப்போராட்டமு, நாட்டுமக்களின் பிரார்த்தனையும் வீண்போகாமல் குழந்தை சுர்ஜித் உயிரோடு பத்திரமாக மீட்கப்படுவான் என அனைவரும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.  

click me!