திருச்சியில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற அதிகாரியை கடித்து கொல்ல முயற்சி - காவல்துறை விசாரணை

By Velmurugan s  |  First Published May 29, 2023, 11:31 AM IST

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மண் கடத்தல் குறித்து ஆய்வு மேற்கொள்ளச் சென்ற வருவாய் அதிகாரி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.


திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ரெங்கநாதபுரத்தை பரமதயாளன் மகன் பிரபாகரன் (வயது 36). இவர் துறையூர் உட்பட பதினாறு கிராமங்களுக்கு வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இரவு நரசிங்கபுரம் கிராமம் அருகே பச்சைமலை அடிவாரம் அரசு புறம்போக்கு நிலத்தில்  மண் கடத்துவதாக துறையூர் தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  தாசில்தார் வனஜா உத்தரவின்படி வருவாய் ஆய்வாளர்  பிரபாகரன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

பச்சமலை அடிவாரத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் ஒரு ஜேசிபி, மற்றும் ஒரு டிராக்டர் ஆகியவற்றுடன் மண் ஏற்றி கொண்டு இருந்தது தெரியவந்தது. உடனடியாக வண்டியின் சாவியை எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் மற்றும் ஜேசிபி உரிமையாளர் தனபால், மணி ஆகிய மூன்று பேரும் வருவாய்துறை அதிகாரியை வழிமறித்து கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

ஏற்காடு கோடை விழாவில் காட்சிபடுத்தப்பட்ட செல்லப்பிராணிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

மேலும் கற்களாளும், கையாளும் கடுமையாக தாக்கி உள்ளனர். கழுத்தின் பின்புறம் மணி என்பவர் கொடூரமாக கடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த பிரபாகரன் அங்கிருந்து தப்பி துறையூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 

என்னை முதல்வராக்கினால் 150 ஆண்டுகள் வரை உயிர் வாழும் ரகசியத்தை உங்களுக்கு சொல்வேன் - சரத்குமார் பேச்சு

சிகிச்சையில்  இருந்த வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை தாசில்தார் வனஜா மற்றும் துறையூர் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து துறையூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் (45), ஜேசிபி ஓட்டுநர் தனபால் (40) ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மணியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

click me!