திருச்சி பெரியகடை வீதியில் 1 கிலோ தங்கம், கால் கிலோ வெள்ளி கொள்ளை; வியாபாரிகள் கலக்கம்

Published : Apr 26, 2023, 05:08 PM IST
திருச்சி பெரியகடை வீதியில் 1 கிலோ தங்கம், கால் கிலோ வெள்ளி கொள்ளை; வியாபாரிகள் கலக்கம்

சுருக்கம்

திருச்சி மாவட்டம் மலைக்கோட்டை அருகே நகை பட்டறையில் வைக்கப்பட்டிருந்த 950 கிராம் தங்கம், கால் கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வியாபாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள சந்துகடை சௌந்தர பாண்டியன் பிள்ளை தெரு பகுதியில் வசித்து வருபவர் ஜோசப். இவர் நகை செய்யும் பட்டறை வைத்துள்ளார். நேற்று இரவு இபி ரோடு பகுதியில் உள்ள வேதாத்திரி நகரில் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு தனது குடும்பத்துடன் சென்று தங்கியுள்ளார்.

இன்று காலை வந்து பார்க்கும் போது கடையில் இருந்த 950 கிராம் தங்கம், கால்கிலோ வெள்ளி, மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து குறித்து கோட்டை காவல்துறையினருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களைக் கொண்டு  விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கவனக்குறைவாக வாகனத்தை திருப்பிய நபரால் சாலையில் தூக்கி வீசப்பட்ட 2 பெண்கள்

சம்பவ இடத்தில் காவல்துணை ஆணையர் அன்பு, காவல் உதவி ஆணையர் நிவேதாலட்சுமி நேரில்  பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து  இக்கொள்ளை  சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருச்சி மாநகரில் நகை பட்டறையில் சுமார் ஒரு கிலோ மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருச்சியில் முதல்வர் இருக்கும் போதே பயங்கரம்! காவலர் குடியிருப்பில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொ*லை! அலறி ஓடிய பொதுமக்கள்
அடி தூள்.. இனி திருச்சியில் இருந்து நியூயார்க் பறக்கலாம்.. புதிய அறிவிப்பு