தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள வாலத்தூரைச் சேர்ந்தவர் ரஞ்சித் பாலா (23). இவர் யூடியூப் மற்றும் இன்ஸ்டா பக்கங்களில் வீடியோ பதிவிட்டு லைக்குகளையும், ஷேர்களையும் குவித்து வரும் இவர் யூடியூப் மூலம் லட்சங்களை சம்பாதித்து வருகிறார்.
தண்ணீரில் பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைத்து அதில் குதித்து ரீல்ஸ் செய்த இரண்டு யூடியூபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள வாலத்தூரைச் சேர்ந்தவர் ரஞ்சித் பாலா (23). இவர் யூடியூப் மற்றும் இன்ஸ்டா பக்கங்களில் வீடியோ பதிவிட்டு லைக்குகளையும், ஷேர்களையும் குவித்து வரும் இவர் யூடியூப் மூலம் லட்சங்களை சம்பாதித்து வருகிறார். இவருக்கு யூடியூபில் 22 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவர் சில அதிர்ச்சியூட்டும் வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
undefined
இதையும் படிங்க: School Reopen: பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு? வெளியாகப்போகும் முக்கியஅறிவிப்பு!
இந்நிலையில் இவர் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் தருவைகுளத்தின் அருகே உள்ள முத்துலிங்கம் (75) என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் தற்போது மழை வெள்ளத்தின் காரணமாக அப்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. அங்கு சென்ற ரஞ்சித் பாலா தனது நண்பர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் மோகத்தில் அப்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் சென்று ஒரு கட்டிடத்தின் மேலே நின்று கீழே நண்பர்களை நிற்க வைத்து, குளத்திற்குள் பெட்ரோலை ஊற்றி அதில் தீ வைத்து அதில் டைவ் அடித்துள்ளார்.
இதையும் படிங்க: தேர்தல் அறிவித்த முதல் நாளே அதிரடி.. சென்னையில் சிக்கிய ரூ.1.42 கோடி பணம்.!
இதை யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலானது. இந்நிலையில் இந்த வீடியோ பல லட்சம் மக்களால் பார்க்கப்பட்டு போலீசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார் இந்த வீடியோவில் இருக்கும் நபர்களை தேடிப் பிடித்து விசாரணை நடத்தி ரஞ்சித் பாலா, சிவக்குமார், இசக்கி ராஜா ஆகிய மூவர் மீது 277 - தண்ணீரை மாசுபடுத்துதல், 278 - சுற்றுச்சூழலை மாசுபடுத்துதல், 430 - நீர்ப்பாசன பணிகளில் காயம் ஏற்படுத்துதல், 285 - பிற நபருக்கு காயம் ஏற்படுத்துதல், 308 - மரணத்தை விளைவிக்கும் என தெரிந்தே முயற்சி செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ரஞ்சித் பாலா மற்றும் சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.