திருச்செந்தூர் அருகே தனியார் காப்பகத்தில் இளம் பெண் மர்மமான உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரத்தில் புனித சூசை அறநிலைய காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இங்கு கல்வி நிலையமும் உள்ளது. இதில் ஆதரவற்ற குழந்தைகளும், ஏழை மாணவர்களும் தங்கி கல்வி பயின்றும் வருகின்றனர்.
இந்நிலையில் இங்குள்ள தையல் பயிற்சி இரண்டாம் ஆண்டு பயின்று வந்த ஆதரவற்ற இளம்பெண்ணான ஷைனி(வயது 19) காப்பகத்தில் உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து திருச்செந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்ணின் உடலை திருச்செந்தூர் தாலுகா காவல் துறையினர் மீட்டு சூசை அறநிலைய காப்பகத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
undefined
பெற்றோர் ரயிலில் அழைத்துச் செல்லாததால் ஏமாற்றம்; கடிதம் எழுதி வைத்துவிட்டு சிறுவன் தற்கொலை
அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயிற்சி அருட்தந்தை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த தற்கொலைக்கான காரணமும் இதுவரை முழுமையாக வெளிவரவில்லை. மேலும், 3 குழந்தைகள் தொடர்ச்சியாக இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அரசியல் தலையீட்டால் இதுகுறித்து காவல் துறையினரும் உரிய விசாரணை நடத்தத் தயங்குவதாகக் கூறப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
எனவே ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களை பல ஆண்டுகளாக பராமரித்து வரும் இந்த காப்பகத்தில் மாவட்ட நிர்வாகம் முறையாக விசாரணை மேற்கொண்டு, தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்ணின் உயிரிழப்பின் மர்மம் என்ன? என்பதை விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்று இந்த காப்பகத்தில் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.