தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மகளிர் தின கொண்டாட்டம்.. ஆலையை திறக்க உறுதிமொழி எடுத்த பெண்கள்.!

By vinoth kumar  |  First Published Mar 10, 2023, 2:13 PM IST

ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தின விழாவை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு மகளிர் தின விழா ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்றது. 


தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் சர்வதேச மகளிர் தினம் கோலாகலம் கொண்டாடப்பட்டது. இதில், சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தின விழாவை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு மகளிர் தின விழா ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்றது. இதில், ஸ்டெர்லைட் முதன்மை இயக்க அலுவலர் சுமதி தலைமையில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். 

Latest Videos

undefined

இதையும் படிங்க;- இந்த செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. நிவாரணம் அறிவித்த கையோடு அதிரடி உத்தரவு போட்ட முதல்வர் ஸ்டாலின்

இந்த விழாவில் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமையவிருக்கும் பர்னிச்சர் பார்க்கில் பெண் தொழில் முனைவோருக்கு பணி ஒதுக்கீடுகளும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும், முறை சாரா தொழிலில் உள்ள பெண்களுக்காக தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும், பஞ்சாயத்து செயலர் பதிவுகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், அரசு சார்ந்த ஒப்பந்த பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும்., பெண்களின் முன்னேற்றத்தில் தங்களுடைய பங்கினை முன்னிறுத்தி செயல்படுத்தி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் போன்ற தீர்மானங்களை பெண்கள் ஒருமித்த குரலில் எடுத்து கொண்டனர்.

இதையும் படிங்க;-  ஆறிபோன டீயை கொடுக்கிறாயா? திட்டிய மாமியாரை கதறவிட்டு தீர்த்து கட்டிய மருமகள்.. எப்படி தெரியுமா?

இதனையடுத்து, ஸ்டெர்லைட் முதன்மை இயக்க அலுவலர் சுமதி உரையாற்றுகையில்;- ஆணுக்கு பெண் சமமாக மதிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல பெண்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை திறக்க இத்தனை மகளிர்கள் ஆதரவாக குரல் கொடுப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆலை மீண்டும் திறக்கப்பட்டவுடன் உலகத்தரம் வாய்ந்த படிப்பினை அளிக்கக்கூடிய வகையில் நல்ல பள்ளிக்கூடம் தொடங்கப்படும். உலகத்தரமாய்ந்த மருத்துவமனை அமைத்து ஏழை எளியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். பெண்களின் மேம்பாட்டுக்காக செயல்படுத்தக்கூடிய அனைத்து திட்டங்களையும் ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து செயல்படுத்தும் என்றார்.

click me!