தூத்துக்குடியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சைக்கிளில் சென்றவர் பலி

Published : Feb 16, 2023, 09:43 AM IST
தூத்துக்குடியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சைக்கிளில் சென்றவர் பலி

சுருக்கம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் சாலையில் ஜோதி நகர் விளக்கு அருகே சைக்கிளில் வந்தவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலை நசுங்கி சைக்கிளில் வந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் ரோடு நான்கு வழிச்சாலையில் ஜோதி நகர் விளக்கு அருகே நேற்று இரவு 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது 4 வழிச்சாலை பகுதியில் சாலைகளில் மின்விளக்குகள் எரியாததால் சைக்கிளில் வந்த நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இந்த விபத்தில் சைக்கிளில் வந்தவர் தூக்கி வீசப்பட்டு தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சைக்கிளில் வந்த நபர் யார்  சைக்கிளில் வந்த நபரை மோதி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் எது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான்கு வழிச் சாலைகளில் சாலையை கடக்கும் பகுதிகளில் முறையாக மின் விளக்குகள், ஒளிரும் ஸ்டிக்கெர்கள் உள்ளிட்டவற்றை முறையாக பராமரித்தால் மட்டுமே சாலையை கடப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் கடப்பார்கள், விபத்துகளும் குறையும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை! ஒரே நாளில் 15 செ.மீ.! திருச்செந்தூர் முருகன் கோவிலின் நிலைமை இதுதான்!
என் தம்பியை கொ* பண்ண உன்ன சும்மா விட்ருவேனா! சினிமா மிஞ்சிய சம்பவம்! அலறிய தூத்துக்குடி.. பதறிய பொதுமக்கள்!