மணல் கொள்ளையை தடுத்த விஏஓ கொலை! எங்களுக்கு பாதுகாப்பு இல்லை.. போராட்டத்தில் குதித்த அரசு ஊழியர்கள்

By Raghupati RFirst Published Apr 26, 2023, 8:50 AM IST
Highlights

மணல் கடத்தலைத் தடுத்த கிராம நிர்வாக அலுவலரை, கும்பல் ஒன்று அலுவலகத்துக்குள்ளே புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசை பாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாட்டில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது அலுவலகத்தில் பணியிலிருந்தபோது திடீரென அலுவலகத்தில் புகுந்த இரண்டு மர்ம நபர்கள், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடினர்.

கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக  முறப்பநாடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீசார் லூர்து பிரான்சிஸை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

பிறகு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், லூர்து பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மணல் கடத்தலைத் தடுத்த காரணத்துக்காக கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் இன்று படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழக முழுவதும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க..தனது ஊழியருக்கு 1500 கோடி மதிப்பிலான வீட்டை பரிசாக கொடுத்த முகேஷ் அம்பானி..யாருப்பா அது.?

click me!