சுட்டெரிக்கும் கோடை வெயில்; திருச்செந்தூரில் நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்ட கோவில் யானை

By Velmurugan sFirst Published Apr 16, 2024, 7:15 PM IST
Highlights

தூத்துக்குடி மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் யானை தெய்வானை நீச்சல் குளத்தில் குதுகல குளியல்.

முருகனின் ஆறு படைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் பராமரிக்கப்படும் தெய்வானை யானைக்கென்று அப்பகுதியில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்களில் இந்த தெய்வானையின் பங்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. திருச்செந்தூர்ல்  உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் நெருக்கமான யானையாக  தெய்வானை திகழ்கிறது.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வாட்டி வதைக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் சிரமப்படுகின்றன. இதற்காக கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை  காலையில் சாதாரண குளியல், மாலையில் நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் என தினமும் 2 வேளை குளிக்க வைக்கப்படுகிறது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.18000 - ஆனந்த் ஸ்ரீநிவாசன் விளக்கம்

இதற்காக, ரூ.30 லட்சத்தில் கடந்த  ஆண்டுக்கு முன்பு நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் யானை  தெய்வானை நீச்சல் அடித்தும், மூழ்கி குளித்தும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஆனந்த குளியல் போட்டது. ‘ஷவர் பாத்’ அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!