ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுர்ஜித் மீட்புப் பணிகளை டி.வி-யில் குடும்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்தபோது, 2 வயது சிறுமி தண்ணீர் டிரம்மில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுர்ஜித் மீட்புப் பணிகளை டி.வி-யில் குடும்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்தபோது, 2 வயது சிறுமி தண்ணீர் டிரம்மில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் சுர்ஜித் எனும் சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரவு பகலாக 4 நாட்களாக மீட்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சுர்ஜித்தின் உடல் அழுகிய சடலமாக மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. சுர்ஜித்துக்காக நாடே கலங்கியதன் சுவடு மறைவதற்குள் தூத்துக்குடியின் ஒரு சிறுமி, பெற்றோரின் கவனக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் இவரது மனைவி நிஷா இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுக்கு முன் திருமணம் நடைப்பெற்றது. இவர்களது மகள் ரேவதி சஞ்சனா (2 ) மீனவரான லிங்கேஷ்வரன் இன்று மாலை வீட்டில் தனது மனைவியுடன் இன்று மாலை நடுக்காட்டுப்பட்டி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்பது தொடர்பாக டி.வி.யை பார்த்து கொண்டிருந்த போது திடீரென குழந்தை காணாமல் போனதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார்.
இந்நிலையில், லிங்கேஸ்வரன் தனது வீட்டின் பாத்ரூமை திறந்து பார்த்தபோது அங்கிருந்த தண்ணீர் கேனில் இருந்த தண்ணீரை எடுக்க முயற்சித்த குழந்தை ரேவதி சஞ்சனா தலைக்குப்புற கவிழ்ந்து மூச்சு திணறி இருந்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து குழந்தையை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.