நவம்பர் 2ம் தேதி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற இருப்பதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரின் கடற்கரை ஓரத்தில் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் இருக்கிறது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான இந்த கோவில் உலக பிரசித்தி பெற்றது. தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் முருகனை தரிசிக்க திருச்செந்தூருக்கு வருகை தருவார்கள்.
இங்கு ஐப்பசி மாதத்தில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழா மிக முக்கியமானது. 6 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சூரனை முருகன் வதம் செய்வதே சிகர நிகழ்ச்சியாகும். இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரள்வார்கள். இந்த வருடம் நவம்பர் 2 ம் தேதி கந்த சஷ்டி திருவிழா கொண்டப்பட இருக்கிறது.
இதற்காக அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டிருக்கிறார். அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள், சுகாதார துறை, மின்வாரியம் மற்றும் இதர அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக வருகிற 14.12.2019 அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: கில்லி வரிசையில் பிகில்..! தாறுமாறாக கொண்டாடும் தளபதி ரசிகர்கள்..