பிரபல ரவுடி மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு..! கோவில்பட்டியில் பரபரப்பு..!

Published : Sep 25, 2019, 11:01 PM ISTUpdated : Sep 25, 2019, 11:02 PM IST
பிரபல ரவுடி மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு..! கோவில்பட்டியில் பரபரப்பு..!

சுருக்கம்

தூத்துக்குடி அருகே காவல்துறையினரை தாக்க முயன்ற பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கராஜா. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் காவல்துறையில் நிலுவையில் இருக்கின்றன. 4 கொலை வழக்குகள் உட்பட 40 வழக்குகள் இவர் மீது இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று ரவுடி மாணிக்கராஜாவை காவல்துறையினர் மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது மாணிக்கராஜ் போலீசாரை வாள் கொண்டு தாக்கியிருக்கிறார். இதில் காவல்துறை அதிகாரி இசக்கி ராஜா காயம் பட்டதாக தெரிகிறது. 

இதன் காரணமாக தற்காப்பிற்காக போலீசார் ரவுடி மாணிக்க ராஜாவின் காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பலத்த காயம் அடைந்த அவர் நிலை தடுமாறி கீழே விழுந்திருக்கிறார். இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

காவல்துறையினரை தாக்க முயன்றதாக தெரிவிக்கப்படும் குற்றசாட்டை மறுத்துள்ள மாணிக்கராஜா, தன்னை கண்ணை கட்டி போலீசார் சுட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் கோவில்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை! ஒரே நாளில் 15 செ.மீ.! திருச்செந்தூர் முருகன் கோவிலின் நிலைமை இதுதான்!
என் தம்பியை கொ* பண்ண உன்ன சும்மா விட்ருவேனா! சினிமா மிஞ்சிய சம்பவம்! அலறிய தூத்துக்குடி.. பதறிய பொதுமக்கள்!