தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்; கள்ள ஓட்டு போட வந்த மர்ம நபர்கள் விரட்டி அடிப்பு

By Velmurugan s  |  First Published Apr 19, 2024, 5:27 PM IST

தூத்துக்குடி அருகே பொட்டலூரணியில் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் கள்ள ஓட்டு போட காரில் வந்தவர்களை சிறைபிடித்து தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராமத்தில் கிராம மக்கள் மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி இன்று தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கிராம மக்கள் கண்மாய் கரையில் அமர்ந்து அங்கேயே மதிய உணவு சமைத்து சாப்பிட்டு கருப்பு கொடி ஏற்றி  தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். இந்நிலையில் கிராமத்திற்குள் ஸ்கார்பியோ காரில் வந்த ஒரு கும்பல் கள்ள ஓட்டு போட முயன்றுள்ளது. இதைத் தொடர்ந்து கிராம மக்கள் புகாரை தொடர்ந்து காவல்துறையினர் கள்ள ஓட்டு போட வந்தவர்களை பிடித்து ஒரு வேனில் அழைத்து சென்றனர். 

என்ன ஆபிசர் இதெல்லாம்? வாக்காளர்களுக்காக அதிகாரிகளுடன் மல்லுகட்டிய அண்ணாமலை

Tap to resize

Latest Videos

undefined

அப்போது கிராம மக்கள் வேனை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஸ்கார்பியோ காரையும் சிறை பிடித்தனர். மேலும் அந்த காரில்  மதுபான பாட்டில்கள் கத்தி, அருவாள், கம்பு இருந்ததாக கூறப்படுகிறது. வேன் மற்றும் ஸ்கார்பியோ காரை சுற்றி கிராம மக்கள் நூற்றுக்கணக்கான போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் வேனின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் கள்ள ஓட்டு போட வந்தவர்களை அழைத்துச் சென்றனர்.

இன்னைக்கு ஒரு நாள் தான் தேர்தல்; நாளை நான் யாரென காட்டுரேன் - திமுக நிர்வாகியின் மிரட்டலால் போலீஸ் அச்சம்

அமைச்சரை திருப்பி அனுப்பிய மக்கள் : முன்னதாக கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த தமிழக மீனவ துறை அமைச்சர்  அனிதா ராதாகிருஷ்ணனை கிராம மக்கள் திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

click me!