இந்தியா முழுவதும் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தூத்துக்குடியில் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக எடுத்து வருகிறது.
undefined
இந்நிலையில், கடந்த மாதம் 23ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன்(55) இன்று உயிரிழந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பார்த்திபன் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சிவக்குமார் கூறுகையில்;- புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கேன்சர் பாதிப்பில் இறந்தார் என்றும் சொல்லலாம், கொரோனா பாதிப்பில் இறந்தார் என்றும் சொல்லலாம் என்றார்.
ஏற்கனவே திருச்சியில் இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் ஒருவீத பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.