லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் சூரனை வதம் செய்த குலசை முத்தாரம்மன்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் இன்று கோவில் கடற்கரையில் நடைபெற்றது.  

laksh of devotees participate dhassara festival at kulasekarapattinam in thoothukudi vel

உலக புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூர்க்கு அடுத்ததாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா  வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு தசரா திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக  தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழாவில் தினமும் இரவு அம்மன் வெவ்வேறு வாகனத்தில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

Latest Videos

விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள்  மகிஷா சூரசம்ஹாரம்  இன்று நள்ளிரவு கோவில் கடற்கரையில் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்திலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை அணிந்து விரதமிருந்த பக்தர்கள் காப்பு கட்டி காளி, அம்மன், ராஜா, ராணி, குறவன், குறத்தி, உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து தனித்தனியாகவும், குழுக்களாகவும் வீடு, வீடாக சென்று பெற்ற காணிக்கையை இன்று கோவில் உண்டியலில்  செலுத்தி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் மஹிஷா சூரமர்தினி கோலத்தில் எழுந்தருளி கடற்கரை வந்தார். முதலில் தன் முகத்துடன் இருந்த மஹிஷாசூரனை அம்மன் வதம் செய்தார். பின்னர் சிங்கமுகமாக உருவம் பெற்றவனையும் வதம் செய்தார். 

ஆளுநர் மாளிகையிலேயே குண்டு வீச்சு; இனியாவது கண் விழித்து பாருங்கள் - முதல்வருக்கு தினகரன் அட்வைஸ்

தொடர்ந்து எருமை முகம் பெற்ற சூயனையும், முடிவில் சேவல் உருவமாக மாறிய மஹிசாசூரனையும் வதம் செய்தார். இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் காளி, ஜெய் காளி என்ற கோஷத்துடன் அம்மனை வழிபட்டனர். கோவில் கடற்கரையில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தது. இதற்காக 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் 30 இடங்களில் 70 கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வந்தனர். பக்தர்கள் வசதிக்காக சுமார் சிறப்பு 200 பேருந்துகள் இயக்கப்பட்டது.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image