பொங்கல் பரிசாக ரூ.2,500 மட்டுமாவது வழங்க வேண்டும் - கடம்பூர் ராஜூ கோரிக்கை

By Velmurugan s  |  First Published Jan 3, 2024, 7:19 PM IST

திமுக அரசு மக்களை வஞ்சிப்பதை நிறுத்திவிட்டு பொங்கல் பரிசாக  ரூ.2500 மட்டுமாவது வழங்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.


சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுச்சிலைக்கு முன்னாள் அமைச்சர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, அதிமுக ஆட்சியின் போது கொரோனா காலத்தில் பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வர், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் 5000 ரூபாயாக வழங்க வேண்டும் என அரசுக்கு யோசனை கூறினார். 

Tap to resize

Latest Videos

undefined

எந்தவொரு கொண்டாட்டமாக இருந்தாலும் அதற்கு வரைமுறை வேண்டும்; ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு தமிழிசை கடும் எதிர்ப்பு

தற்போது தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களும், அதிக கன மழை காரணமாக தென் மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கரோனா காலத்தைப் போன்ற தற்போதும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அதிமுக ஆட்சியின் போது அரசுக்கு யோசனை சொன்னவர், இன்றைக்கு அதே 5000 ரூபாய் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் வழங்கிய 2500 ரூபாயாவது மக்களுக்கு கொடுத்திருக்க வேண்டும். பொங்கல் பரிசாக பையை மட்டும் கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளனர். 

கரூரில் வீட்டு வேலைக்காக அழைத்து சிறுமியை கற்பழித்த முதியவர்; மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இவர்களுக்கு ஏமாற்றுவது கைவந்த கலை. தேர்தல் நேரத்தில் 520 வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் 10 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாமல் இந்திய அரசு மக்களை வஞ்சிக்கின்றது. இதனால் மக்கள் கோபத்தின் உள்ளனர். இது வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். இந்த அரசு மக்களை வஞ்சிப்பதை நிறுத்திவிட்டு பொங்கல் பரிசாக  ரூ.2500 மட்டுமாவது வழங்க வேண்டும். 

தூத்துக்குடிக்கு வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெள்ளச் சேதங்களை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 15 ஆயிரம் வழங்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். ஆனால் இவர்கள் 6000 மட்டுமே வழங்குகின்றனர். அதுவும் பாகுபாடு பார்த்து ஒரே மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு ஒரு பகுதிக்கு ரூபாய் ஆயிரம் முன் மற்றொரு பகுதிக்கு ரூபாய் 6000 வழங்கப்பட்டுள்ளது. 

இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது ஓரவஞ்சகமான செயல். சில இடங்களில் மக்கள் இந்த நிவாரண உதவி வேண்டாம் என வெறுக்கும் அளவுக்கு உள்ளனர். எனவே இது போன்றவற்றை வருங்காலங்களில் அரசு தவிர்க்க வேண்டும். பாஜகவுடன் எந்த உறவும் இல்லை என்ற தெளிவான நிலைப்பாட்டை அதிமுக எடுத்துள்ளது. அதன்பின்னர் பாஜகவை யார் சந்தித்தால் எங்களுக்கு என்ன. நாங்களும் அதிமுக தான் என்று சொல்லிக் கொள்பவர் நேற்றைய தினம் தமிழகத்துக்கு வந்த பிரதமரை சென்று சந்தித்துள்ளார். இது நல்லது தான். நான் இனிமேல் அதிமுக இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தி விட்டார் என்றார்.

click me!