குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் திரும்ப செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் ஊர் திரும்ப முடியாமல் 3 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.
உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 15-ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மஹிஷா சூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று திருவிழா நிறைவு பெற்று அம்மனுக்கு காப்பு களையப்பட்ட நிலையில் விரதத்தை முடித்துக் கொண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
சுமார் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்த நிலையில் மாலை 6 மணியில் இருந்து பேருந்து இல்லாததால், குலசேகரன்பட்டினம் தற்காலிக பேருந்து நிலையம், திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் குழந்தைகளுடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் கடுமையாக அவதி அடைந்தனர்.
திருமணமாகாத விரக்தியில் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை
இதனிடையே திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளத்தை சேர்ந்த கலா(வயது 38) என்பவர் திருநெல்வேலி செல்ல கூடிய தனியார் பேருந்தில் ஏற முயன்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் கழுத்தில் அணிந்திருந்த 3½ சவரன் தங்கச் சங்கிலியை பெண் ஒருவர் பறித்து சென்றதாகக் கூறப்படுகிறது. பேருந்துக்குள் சென்ற கலா கழுத்தை பார்த்தபோது அவர் அணிந்திருந்த செயினை காணவில்லை. உடனே கலா பேருந்தை விட்டு கீழே இறங்கி கதறி அழுதார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் ஓட்டுநர் பேருந்தை இயக்கிச் சென்றார். இதனால் கலா அழுது கொண்டே பேருந்து பின்னாலே ஓடி சென்றார். இதனை அடுத்து உடனடியாக திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு காவல் நிலைய வாசலில் அமர்ந்து கதறி அழுத காட்சி காண்போரை கண் கலங்கச் செய்தது.
கடும் பனிமூட்டத்தால் நேர்ந்த கோர விபத்து; லாரி மீது கார் மோதி கர்நாடகாவில் 13 பேர் பலி
மேலும் திருச்செந்தூரில் உள்ள நகைக்கடையில் வேலை பார்க்கும் கண்ணன் என்பவர் செல்போனை பேருந்தில் ஏற முயன்ற போது பறித்துச் சென்றுள்ளனர். இதுபோல் இன்று பேருந்தில் ஏறிய சுமார் 10 பேர் செல்போன் பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல மணி நேரமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பேருந்து நிலையத்தில் காத்திருந்த நிலையில் ஒரு போலீசார் கூட பாதுகாப்பு பணியில் இல்லாததால் செயின் பறிப்பு, செல்போன்கள் பறிப்பு, போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.