தூத்துக்குடியில் பள்ளி வளாகத்தில் கீழே விழுந்து கிடந்த நாவல் பழங்களை சாப்பிட்ட மாணவன் சிறிது நேரத்திலேயே பள்ளியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த சிவஞானபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற மாணவன் 7ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் மதியம் உணவு இடைவேளையின் போது உணவு சாப்பிட்ட மகேந்திரன் சிறிது நேரத்தில் பள்ளி வளாகத்தில் பழுத்து கீழே விழுந்து கிடந்த நாவல் பழங்களை எடுத்து சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்ததாக சொல்லப்படுகிறது.
மூடிய அறையில் இளைஞர்கள் செய்த தவறு; பறிபோன 2 உயிர் - நீங்களும் இந்த தப்ப செய்யாதீங்க
பின்னர் சக மாணவர்களுடன் வகுப்புக்குச் சென்ற மகேந்திரன் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்துள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆசிரியர்கள் மாணவனை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு மாணவனின் பெற்றோர் கதறி அழுதனர்.
தங்கலான் பட பிரமோஷன் மொத்தமாக நிறுத்தம்; காரணத்தை கேட்டா உங்களுக்கே புல்லரிச்சிடும்
இது தொடர்பாக தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளி வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மாணவனின் மரணத்திற்கு கீழே கிடந்த பழங்களை சாப்பிட்டது தான் காரணமா? என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே உறுதி செய்ய முடியும். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.