மனைவி செய்த காரியத்தால் அதிர்ச்சி... அவமானம் தாங்க முடியால் தூக்கில் தொங்கிய கணவர்..!

Published : Apr 08, 2020, 12:05 PM IST
மனைவி செய்த காரியத்தால் அதிர்ச்சி... அவமானம் தாங்க முடியால் தூக்கில் தொங்கிய  கணவர்..!

சுருக்கம்

தூத்துக்குடி பெரியசெல்வபுரம் பகதியை சேர்ந்தவர் வின்சென்ட், துறைமுக ஊழியர். இவர் தன்னுடைய மனைவி ஜான்சி மற்றும் குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து  வந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 3ம் தேதி இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 100 பவுன் நகை, 20 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளைபோனது.  இது தொடர்பாக தாளமுத்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

100 பவுன் நகையை மனைவி திருடி மறைத்து வைத்து விட்டு, திருடு போனதாக  நாடகமாடியதால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி பெரியசெல்வபுரம் பகதியை சேர்ந்தவர் வின்சென்ட், துறைமுக ஊழியர். இவர் தன்னுடைய மனைவி ஜான்சி மற்றும் குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து  வந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 3ம் தேதி இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 100 பவுன் நகை, 20 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளைபோனது.  இது தொடர்பாக தாளமுத்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில் விண்சென்டின் மனைவி ஜான்சியே சொந்தவீட்டுக்குள் நகைகளை கொள்ளையடித்து விட்டு நாடகமாடியது அம்பலமானது. போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் மதுபோதைக்கு அடிமையான தன் கணவர், குடிப்பதற்காக நகைகளை விற்று விடுவாரோ என்ற பயத்தில், அந்த நகைகளை நானே திருடி வீட்டிற்கே எதிரே உள்ள எங்களுக்கு சொந்தமான காலி இடத்தில் மண்ணுக்குள் புதைத்து வைத்திருப்பதாக கூறியுள்ளார். 

இதனையடுத்து,  வின்சென்ட்டின் மனைவி ஜான்சியை போலீசார் கைது செய்து அன்றை தினமே சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், கட்டிய மனைவியே தன்மீது நம்பிக்கை இல்லாமல் சொந்தவீட்டில் நகையை திருடி ஒளித்துவைத்து நாடகமாடியது வின்சென்டுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இது அக்கம்பக்கதினரிடையே அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர், நள்ளிரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை! ஒரே நாளில் 15 செ.மீ.! திருச்செந்தூர் முருகன் கோவிலின் நிலைமை இதுதான்!
என் தம்பியை கொ* பண்ண உன்ன சும்மா விட்ருவேனா! சினிமா மிஞ்சிய சம்பவம்! அலறிய தூத்துக்குடி.. பதறிய பொதுமக்கள்!