தென்மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

Published : Mar 02, 2020, 05:25 PM ISTUpdated : Mar 02, 2020, 05:30 PM IST
தென்மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

சுருக்கம்

அய்யா வைகுண்டசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு தென்மாவட்டங்களான தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரிக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அய்யா வைகுண்டசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு தென்மாவட்டங்களான தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரிக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டரின் பிறந்த நாள் அவதார விழாவாக தென்மாவட்டங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் நாகர்கோவிலில் இருக்கும் சாமிதோப்பு பதியில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள்.

அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 03-03-2020 (செவ்வாய்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே அறிவித்துள்ளார். அன்றைய தினம் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது எனவும் விடுமுறையை ஈடுகட்டும் விதமாக ஏப்ரல் 25-04-2020 அன்று வேலை நாளாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தூத்துக்குடி மாவட்டத்திற்கும் நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். அதனை ஈடுசெய்யும் வகையில் வருகிற மார்ச் 14ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டைய கிளப்பிய திரௌபதி..! பெண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கி அதிரடி..!

PREV
click me!

Recommended Stories

விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை! ஒரே நாளில் 15 செ.மீ.! திருச்செந்தூர் முருகன் கோவிலின் நிலைமை இதுதான்!
என் தம்பியை கொ* பண்ண உன்ன சும்மா விட்ருவேனா! சினிமா மிஞ்சிய சம்பவம்! அலறிய தூத்துக்குடி.. பதறிய பொதுமக்கள்!