போதிய தண்ணீர் வராத காரணத்தினால் குறுவை பயிர்களை விவசாயி ஒருவர் ஆடு, மாடுகளுக்கு இறையாக்கிய நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்ட காரணத்தினால் மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியில் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கோட்டூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் நேரடி விதைப்பில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் தற்போது வரை ஆறுகளில் முழு அளவு தண்ணீர் வராத காரணத்தினால் பல்வேறு இடங்களில் குறுவைப் பயிர்கள் கருகியும், காய்ந்தும் வந்தது. தற்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் ஒரு சில இடங்களில் பயிர்கள் முளைக்கத் துவங்கியுள்ளன. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சோத்திரியம், கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் முள்ளியாற்றை நம்பி விவசாயிகள் 100 ஏக்கர் பரப்பளவில் குறுவை தெளிக்கப்பட்டு தற்போது 40 நாட்களுக்கு மேல் ஆகின்ற நிலையில் ஆறுகளில் தற்போது வரை மூன்று முறை மட்டுமே தண்ணீர் வந்துள்ளது.
undefined
பிரசித்தி பெற்ற செங்கழுநீரம்மன் ஆலய தேரோட்டம்; முதல்வர், ஆளுநர் பங்கேற்று தொடங்கி வைப்பு
மேலும் அந்த தண்ணீரை பாசன வாய்காகாலான பொம்மன் வாய்க்காலில் டீசல் என்ஜின் வைத்து இறைத்து பயிரைக் காற்றப்பற்றினார்கள். தற்போது எஞ்சின் வைத்து இரைப்பதற்கு கூட தண்ணிர் இல்லாததால் சோத்திரியம் பகுதியைச் சேர்ந்த அறிவழகன் என்கிற விவசாயி தனக்கு சொந்தமான 7 ஏக்கர் குறுவை பயிரில் அதே பகுதியைச் சேர்ந்த ஆடு, மாடு வளர்ப்பவர்களை விட்டு மேய்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
வேலூரில் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களிடம் கஞ்சா விற்பனை; 7 பைக்குகள் பறிமுதல், ஒருவர் கைது
இதனால் தற்போது ஏழு ஏக்கர் பரப்பளவிலும் ஆடு, மாடுகள் மேயும் அவல நிலவி வருகிறது. எனவே உடனடியாக வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அவ்வாறு நிவாரணம் வழங்கினால் மட்டுமே அடுத்த கட்ட விவசாய பணியில் ஈடுபட முடியும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.