பட்டியலின மக்களுக்கு கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட விவகராத்தில் திருவாரூர் மாவட்டத்தில் கோயில் ஒன்றை காவல்துறையினர் அடைத்துள்ளனர்.
சாமி வீதி உலா பிரச்சனை காரணமாக, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களை கோயிலில் இருந்து வெளியே அனுப்பி, கோயிலை காவல்துறையினர் பூட்டியுள்ளதால், திருவாரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் அரசவனங்காடு கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு சாமி வீதியுலா செல்லக் கூடாது எனவும், அச்சமூக மக்கள் குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளக் கூடாது எனவும் கூறப்பட்டதாக தெரிகிறது.
undefined
செல்போனில் பேசுவதை கண்டித்த தாய்? 10ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு
இதனை கண்டித்து திருவாரூர் - கும்பகோணம் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் சாலை மறியல் கடந்த மூன்று மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, இப்பிரச்சினை காரணமாக, கோவிலின் வாசலை காவல்துறையினர் பூட்டியுள்ளனர்.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களை கோயிலில் இருந்து வெளியே அனுப்பி, கோயிலை காவல்துறையினர் பூட்டியதால் அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுவரை இருதரப்பினர் மத்தியிலும் உடன்பாடு ஏற்படாததால் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.