திருவாரூர் மாவட்டத்தில் செல்போனில் பேசுவதை தாய் கண்டித்த நிலையில் 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்து.
திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட அண்ணா காலனி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் மகேஸ்வரி. இவரது கணவர் கலியபெருமாள். இவர் கோவையில் தங்கியிருந்து கட்டிட பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஐந்து வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. மகேஸ்வரி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மகன் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மகளுடன் தங்கி உள்ளார்.
மேலும் ஈஸ்வரி திருவாரூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் மகேஸ்வரி நகை கடைக்கு சென்று விட ஷாலினி தனது பள்ளிக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து மகேஸ்வரி வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது ஷாலினி மின்விசிறியில் தனது துப்பட்டாவின் மூலம் தூக்கு போட்டு தொங்கியுள்ளார். இதையடுத்து கதறித் துடித்த மகேஸ்வரியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
undefined
சொகுசு கேரவனில் நீதிமன்றத்திற்கு வந்த ராக்கெட் ராஜா; சட்டமன்ற தேர்தலில் போட்டி என அறிவிப்பு
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் நகர காவல் துறையினர் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முதல் கட்டமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி அடிக்கடி செல் போனில் பேசி வந்ததாகவும், இதுகுறித்து மகேஸ்வரி கண்டித்த காரணத்தினால் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிய வருகிறது. இருப்பினும உண்மையான காரணம் குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாளியில் தண்ணீர் தெளித்து நெல் பயிர்களை காப்பாற்ற துடிக்கும் பெண் விவசாயி; திருவாரூரில் வேதனை