திருவாரூரில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் திடீர் மரணம்

By Velmurugan s  |  First Published Jul 8, 2023, 12:22 PM IST

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருவாரூர் நகரத்திற்குட்பட்ட காகிதக்காரத் தெருவில் வசித்து வந்தவர்கள் சந்திரசேகரன், விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சந்திரசேகரன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியில் இருந்து வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி திருவாரூர் நகர காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பணிக்குச் சென்ற சந்திரசேகரன் மதிய உணவு அருந்திவிட்டு தனது பணிகளை கவனித்துக் கொண்டிருந்த போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து சக பணியாளர்கள் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

மதுரை பறக்கும் பாலத்தில் பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு பலி

பணியின் போது மாரடைப்பில் உயிரிழந்த 58 வயதான சந்திரசேகரன் இதற்கு முன்பு கூத்தாநல்லூர் காவல் நிலையம், திருவாரூர் தாலுகா காவல் நிலையம், நிலைய எழுத்தராக பணிபுரிந்துள்ளார். கடந்த நான்கு வருடங்களாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடத்தில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பணம் தராவிட்டால் இலவச மின்சாரம் கிடையாது; அதிகாரிகளின் அடாவடி தனத்தால் கதி கலங்கும் நெசவாளர்கள்

நேற்று திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஒரு வருடம் பணியில் இருந்த  கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

click me!