அட கடவுளே! சாவு எப்படி எல்லாம் வருது பாத்தீங்களா.. துடிதுடித்து உயிரிழந்த கல்லூரி மாணவி.. எப்படி தெரியுமா?

Published : Jun 26, 2023, 03:12 PM ISTUpdated : Jun 26, 2023, 03:16 PM IST
அட கடவுளே! சாவு எப்படி எல்லாம் வருது பாத்தீங்களா.. துடிதுடித்து உயிரிழந்த கல்லூரி மாணவி.. எப்படி தெரியுமா?

சுருக்கம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகள் பிரகதீஸ்வரி(18). கல்லூரியில் படித்து வருகிறார். இவர் வீட்டருகே உள்ள குளத்தில் துணிகளை துவைத்துவிட்டு குளித்துக்கொண்டிருந்தார்.

திருத்துறைப்பூண்டி அருகே குளத்தில் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகள் பிரகதீஸ்வரி(18). கல்லூரியில் படித்து வருகிறார். இவர் வீட்டருகே உள்ள குளத்தில் துணிகளை துவைத்துவிட்டு குளித்துக்கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மின்கம்பம் மீது பயங்கரமாக மோதியது.

இதையும் படிங்க;- சென்னையில் அதிர்ச்சி.. பிரபல தனியார் ஓட்டல் லிப்டில் சிக்கிய ஊழியர்.. இரண்டு துண்டாகி பலி.. நடந்தது என்ன?

இதில் மின்கம்பம் முறிந்து அருகில் உள்ள குளத்தில் விழுந்தது. அப்போது குளத்தில் மின்சாரம் பாய்ந்து குளித்துக்கொண்டிருந்த பிரகதீஸ்வரி மீது மின்சாரம்  தாக்கி சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரகதீஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க;-  மின்வெட்டு குறித்து ட்வீட் போட்ட பி.சி. ஸ்ரீராம்.. அமைச்சர் தங்கம் தென்னரசு என்ன பதில் அளித்தார் தெரியுமா?

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் குளித்து கொண்டிருந்தவர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகையுடன் UPSC , TNPSC படிக்க இலவச பயிற்சி : தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி?
திருவாரூர் மாவட்ட சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு: 163 பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கவும்…