ஆங்கில மருத்துவம் பார்த்த ஹோமியோபதி மருத்துவர் உள்பட 10 போலி மருத்துவர்கள் அதிரடி கைது

By Velmurugan s  |  First Published Apr 8, 2023, 3:24 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் ஹோமியோபதி மருத்துவம் படித்துவிட்டு நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்  உள்பட 10 போலி மருத்துவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.


திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 52). இவர் ஹோமியோபதி மருத்துவம் படித்து விட்டு அப்பகுதியில் உள்ள நோயாளிகளுக்கு தனது வீட்டிலேயே ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததாக தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவரது கிளீனிக்கில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், மாரியப்பனை கைது செய்தனர். 

இதே போன்று கொல்லுமாங்குடி அருகில் உள்ள சிறுபுலியூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (52) என்பவர் ஹோமியோபதி மருத்துவம் படித்துவிட்டு தனது மருந்தகத்தில் நோயாளிகளுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை  அளித்ததாக பேரளம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிவக்குமாரை காவல் துறையினர் கைது செய்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

அதே போன்று நன்னிலம் அருகே மாப்பிள்ளைக்குப்பம் பகுதியில் மருந்தாளுநர் படிப்பு முடித்துவிட்டு மருந்தகம் நடத்தி வந்த செந்தில் என்பவர் மருத்துவம் படிக்காமல் தனது மருந்தகத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததைத் தொடர்ந்து செந்திலை நன்னிலம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

பொதுத்தேர்வில் மாணவர்கள் பார்த்து எழுத உதவிய 5 ஆசிரியர்கள் இடைநீக்கம்

மேலும் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததாக கூறி நாச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம், இடும்பாவனம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், பெருகவழந்தான் பகுதியை சேர்ந்த சிவகுருநாதன், அம்மனூர் பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன், திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த துரைராஜ், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த குமார், சேகரை பகுதியைச் சேர்ந்த சவுரிராஜ் உள்ளிட்ட பத்து போலி மருத்துவர்களை காவல்துறையினர் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

click me!