திருவாரூரில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழக மாணவிகள் மீது மது போதையில் தாக்குதல் நடத்திய இளைஞர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 2 ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு ஒருங்கிணைந்த முதுகலை சமூகவியல் மூன்றாம் ஆண்டு மாணவியான சென்னையை சேர்ந்த தரண்யா மற்றும் கேரளாவை சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவியான தேவசந்தனா ஆகியோர் இரவு உணவு உண்பதற்காகவும் ஜெராக்ஸ் எடுப்பதற்காகவும் கங்களாஞ்சேரி கடைத் தெருவிற்கு வந்துள்ளனர்.
மாணவிகள் இருவரும் கங்களாஞ்சேரியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்து கொண்டு வெளியில் வந்த போது நான்கு இளைஞர்கள் மதுபோதையில் மாணவிகளை தாக்கியதுடன் செல்போனை பறித்துக் கொண்டு கழுத்தில் கத்திரிய வைத்து மிரட்டி உள்ளனர். பயந்து போய் மாணவிகள் எதிரே உள்ள உணவகத்திற்குள் ஒடி நுழைந்துள்ளனர். உணவக உரிமையாளர் அவர்களை தட்டி கேட்டதற்கு அவரையும் தாக்கி அங்குள்ள பொருட்களையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
undefined
கஞ்சா போதையில் பெண்களிடம் ஆபாச வார்த்தைகளில் வசை பாடிய இளைஞர்கள் விரட்டியடிப்பு
இது குறித்து மாணவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் திருக்கண்ணபுரம் காவல்துறையினர் வண்டாம்பாளை பகுதியைச் சேர்ந்த கொத்தனார்களான வணிகராஜ் மற்றும் செல்லத்துரை ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மேலும் தாக்குதலுக்குள்ளான மாணவிகள் இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.