திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 நாட்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் புனரமைக்கப்பட்டுள்ளன.
நிலத்தடி நீர் மிகக் குறைவாக உள்ள மாவட்டம் என மத்திய நீர்வளத்துறையினால் அறிவிக்கப்பட்டதுதான் திருவண்ணாமலை மாவட்டம். இந்த மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தம் தமிழக அரசு நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. 30 நாட்களுக்குள் 1,121 பண்ணை குட்டைகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உட்பட்ட 18 ஒன்றியப் பகுதிகளில் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மீட்டெடுக்கும் பணி நடந்தது.
undefined
600 கிராம ஊராட்சிகளில் உள்ள 1333 பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் சீர் செய்யப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. ஜனவரி 20ஆம் தேதி தமிழகச் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி தொடங்கி வைத்த இந்தப் பணிகள் கடந்த 2ஆம் தேதி நிறைவு அடைந்தது.
80 ஆண்டுகளுக்குப் பின் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி
சீரமைக்கப்பட்ட ஆழ்துளை குழாய் கிணறுகளைச் சுற்றி குழிகள் ஏற்ப்படுத்தப்பட்டன. அவை 3 மீ. நீளமும் 3 மீ. அகலமும் 2.5 ஆழமும் கொண்டவை. குழாய்களில் நீர் கசிவுத் துளைகள் இடப்பட்டு மண் அடைத்துக் கொள்ளாதபடி சுற்றிலும் நுண்வலை போடப்பட்டுள்ளது. குழியில் சிறிய கருங்கற்களும் நிரப்பப்பட்டு அரை அடிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. ஒரு கிணற்றை மீட்க 50 ஆயிரம் ரூபாய் வீதம் 1333 கிணறுகளை மீட்க 6.67 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையின் வருடாந்திர சராசரி மழைப்பொழிவு 1046 மி.மீ. ஆக உள்ளது. இதனால் மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் 4-5 அடி உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எலைட் உலக சாதனை நிறுவனம், ஆசிய உலக சாதனை நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் 1333 கிணறுகள் 14 நாட்களில் மீட்டெடுக்கப்பட்டதை உலக சாதனையாக அங்கீகரித்துள்ளன.
Tamil Magan Hussain: இரட்டை இலை யாருக்கு? முடிவெடுக்க தமிழ்மகன் உசேனுக்கு அதிகாரம்!