செம காட்டு காட்டும் கொரோனா.. பாதிப்பு புதிய உச்சத்தால் முழு ஊரடங்கிற்கு தயாராகும் திருவண்ணாமலை..?

By vinoth kumarFirst Published Jun 22, 2020, 4:38 PM IST
Highlights

திருவண்ணாமலையில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 139 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,199 ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலையில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 139 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,199 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவின் கோரப்பிடியில் தமிழகம் சிக்கி சின்னபின்னமாகி வருகிறது. சென்னையில் மட்டும் மிகப்பெரிய அளவில் தொற்று இருந்த நிலையில், மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாவே பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது.  சென்னை மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களால் பாதிப்பு உயர்ந்துள்ளது.  இதனால் சென்னையில் அமல்படுத்தப்பட்ட போன்று முழு ஊரடங்கை அமல்படுத்தினால் சரியாக இருக்கும் என பொதுமக்கள் கூறிவருகின்றனர். 

இதனிடையே, திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் திருவண்ணாமலை தாலுகா வியாபாரிகள் சங்கத்தினர் தற்காப்பு நடவடிக்கையின் காரணமாக தாமாக முன்வந்து கடைகள், வணிக நிறுவனங்களை 10 நாட்கள் மூட முடிவு செய்தனர். அதன்படி, நேற்று திருவண்ணாமலை நகரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்ததால் நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில், இன்று திருவண்ணாமலையில் 139 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,199 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6ஆக உள்ளது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை திருவண்ணாமலை மாவட்டம் 5வது இடத்தில் உள்ளது. இதனால், தி.மலையில் முழு ஊடங்கை அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதை அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!