திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வெளிமாவட்ட நபர்கள் வர அனுமதியில்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வெளிமாவட்ட நபர்கள் வர அனுமதியில்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,504 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 25,344 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 479-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 33,244 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே 701 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு ஊரடங்கு ஜூன் 19 முதல் 30 வரையிலான 12 நாட்கள் அமலில் இருக்கும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமலும், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமலும் வருபர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று ஆட்சியர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலையில் முக கவசம் அணியாமல் சென்றால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அனுமதி இன்றி உள்ளே வருவபர்களுக்கு உதவி செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.