திருவண்ணாமலையில் துரத்தி துரத்தி கொதறும் கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சம்..!

By vinoth kumarFirst Published Jun 3, 2020, 5:54 PM IST
Highlights

திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்தையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  465ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்தையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  465ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் கொடூர கொரோனாவின் தாக்குதல் கடந்த சில நாட்களாக பெரும் உச்சத்தை எட்டி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு எகிறி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24,586ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 13,706 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு இன்று 6 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 203-ஆக உயர்ந்துள்ளது. 

அதிகபட்சமாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 16,585 ஆக அதிகரித்துள்ளது. 8,554 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150-ஆக உள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே 444 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னையில் இருந்து வந்த 13 பேர், மும்பையில் இருந்து வந்த 5 பேர் உட்பட 21 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 146 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

click me!