வீட்டில் பிணமாக தொங்கிய காதல் ஜோடி..! திருமணமான ஒன்றரை மாதத்தில் பரிதாபம்..!

By Manikandan S R S  |  First Published May 13, 2020, 10:48 AM IST

இவர்களின் காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரிய வரவே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனினும் காதலில் உறுதியாக இருந்த இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி ஒன்று சேர முடிவெடுத்தனர். அதன்படி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக ஜெயக்குமாரும் விஜயாவும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின் கோட்டக்கல்லில் இருவரும் வசித்து வந்தனர்.


திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே இருக்கும் மக்கள் கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மகன் ஜெயக்குமார்(23). பாலிடெக்னிக் படித்து இருக்கும் இவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே இருக்கும் கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயா(23) என்கிற பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நண்பர்களாக பழகிய இவர்கள் நாளடைவில் காதலிக்க தொடங்கியுள்ளனர்.

Tap to resize

Latest Videos

விஜயா ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரிய வரவே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனினும் காதலில் உறுதியாக இருந்த இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி ஒன்று சேர முடிவெடுத்தனர். அதன்படி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக ஜெயக்குமாரும் விஜயாவும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின் கோட்டக்கல்லில் இருவரும் வசித்து வந்தனர்.

ஆனால் இந்த திருமணத்திற்கு விஜயா வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தங்களது மகளின் திருமணத்தை விஜயாவின் பெற்றோர் ஏற்றுக் கொள்ளாமல் இருந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த விஜயா தனது கணவர் ஜெயக்குமாரிடம் வருந்தி இருக்கிறார். இதனால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று மதியம் வீட்டில் தனித்தனி அறையில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி விரைந்து வந்த காவலர்கள் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. திருமணமான ஒன்றரை மாதத்தில் காதல் ஜோடி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

click me!