திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த வேலனந்தல் கிராமத்தை 28 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவருக்கு திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். அதேபோல், அவர்களது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்த திட்டமிட்டுள்ளனர். கொரோனா பாதித்த இளைஞர் சென்னை வேளச்சேரியில் உள்ள மால் ஒன்றில் காசாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் 28 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவருக்கு திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டு வருகின்றன. சமுதாயப் பரவல் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் முயற்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவையைத் தவிர்த்து வெளியில் வருபவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
undefined
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் உள்ளோர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் வெளிநாட்டிலிருந்து வருபவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள், அவர் சென்று வந்த பகுதிகளில் உள்ளோர், அவரது வீடு அமைந்துள்ள 7 கி.மீ. சுற்றளவு பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த வேளானந்தல் கிராமத்தை 28 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவருக்கு திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். அதேபோல், அவர்களது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்த திட்டமிட்டுள்ளனர். கொரோனா பாதித்த இளைஞர் சென்னை வேளச்சேரியில் உள்ள மால் ஒன்றில் காசாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில், 15 மாவட்டங்களில் 68 பேரை கொரோனா நோய் தாக்கியுள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 24 பேரும், சென்னையில் 22 பேர் கொரோனா நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.