108 ஆம்புலன்ஸில் பிறந்த அழகான பெண்குழந்தை..! உச்சிமுகர்ந்த செவிலியர்..!

By Manikandan S R S  |  First Published Nov 18, 2019, 3:01 PM IST

திருவண்ணாமலை அருகே 108 ஆம்புலன்ஸில் செல்லும் போதே பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.


திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரைச் சேர்ந்தவர் கதிரவன். இவரது மனைவி ஆதிலட்சுமி. லாரி ஓட்டுநராக கதிரவன் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஆதிலட்சுமி மூன்றாவது முறையாக கர்ப்பமடைந்தார். அவரை கணவர் மற்றும் உறவினர்கள் கவனித்து வந்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

இந்தநிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஆதிலட்சுமிக்கு நேற்று முன்தினம் மாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரை உறவினர்கள் கீழ்பென்னாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே ஆம்புலன்ஸில் செல்லும் போதே ஆதிலட்சுமிக்கு பிரசவ வலி அதிகரித்தது. ஆம்புலன்சில் மருத்துவ டெக்னீஷியராக இருந்த குமரன்  என்பவர் ஆதிலட்சுமிக்கு பிரசவம் பார்த்தார். அதில் அவருக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. குழந்தையை உச்சி முகர்ந்த செவிலியர் உறவினர்களிடம் கொடுத்தார். இதையடுத்து தாயும், குழந்தையும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

click me!