செல்போன் பேசி தண்டவாளத்தை கடந்த பெண்..! ரயில்மோதி உடல் துண்டு துண்டான பரிதாபம்..!

By Manikandan S R SFirst Published Mar 4, 2020, 10:29 AM IST
Highlights

நேற்று பூ வாங்கிய சுந்தரி திருத்தணி இரண்டாவது ரயில்வே கேட் வழியாக செல்போன் பேசியபடி நடந்து சென்றுகொண்டிருந்தார். அந்தநேரத்தில் அவ்வழியாக ரேணிகுண்டாவில் இருந்து சென்னை நோக்கி அதிவிரைவு விரைவு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதைக்கவனிக்காத சுந்தரி, தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது அதிவேகத்தில் வந்து ரயில், சுந்தரி மீது பயங்கரமாக மோதியது. இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே சுந்தரி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே இருக்கிறது தும்பிக்குளம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சுந்தரி(35). அந்த பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். தினமும் தும்பிக்குளத்தில் இருந்து திருத்தணி மார்கெட்டிற்கு செல்லும் சுந்தரி, அங்கு விற்பனைக்கு தேவையான பூக்களை வாங்கி கொண்டு மீண்டும் ரயில் மூலம் வீடு திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதன்படி நேற்று பூ வாங்கிய சுந்தரி திருத்தணி இரண்டாவது ரயில்வே கேட் வழியாக செல்போன் பேசியபடி நடந்து சென்றுகொண்டிருந்தார். அந்தநேரத்தில் அவ்வழியாக ரேணிகுண்டாவில் இருந்து சென்னை நோக்கி அதிவிரைவு விரைவு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதைக்கவனிக்காத சுந்தரி, தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது அதிவேகத்தில் வந்து ரயில், சுந்தரி மீது பயங்கரமாக மோதியது. இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே சுந்தரி பரிதாபமாக உயிரிழந்தார்.

எப்படியாவது ஒரு எம்.பி சீட் ஒதுக்குங்க..! அதிமுகவை விடாமல் துரத்தும் தேமுதிக..!

விபத்து குறித்து உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் சுந்தரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த பகுதியில் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடப்பதாகவும் ரயில்வே நிர்வாகம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி விபத்தை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

190 கி.மீ...! 1 மணி 50 நிமிடங்கள்..! நோயாளியை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்..!

click me!