திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 494ஆக அதிகரித்துள்ளது.
திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 494ஆக அதிகரித்துள்ளது. இதில், பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 6535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,605 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 44 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 3330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக அதிக அளவிலான நோய்தொற்று பரவலுக்கு கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்த வியாபாரிகள், தொழிலாளர்களே காரணம் என்று தெரிகிறது. அவர்கள் மூலம் பலருக்கு கொரோனா பரவி உள்ளது.
undefined
இந்நிலையில், கொரோனா பாதிப்பில் நேற்று முன்தினம் வரை தமிழக அளவில் திருவள்ளூர் மாவட்டம் 5-வது இடத்தில் இருந்தது. நேற்று ஒரே நாளில் 75 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 270 ஆக அதிகரித்ததால் அரியலூர், விழுப்புரம் மாவட்டங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு திருவள்ளூர் மாவட்டம் 3-வது இடத்திற்கு சென்றுவிட்டது. முதல் இடத்தில் உள்ள சென்னையில் 3043 பேரும், 2-வது இடத்தில் உள்ள கடலூரில் 390 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், ஒன்று ஒரே நாளில் திருவள்ளூரில் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 494ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, சென்னைக்கு அடுத்து கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டமாக திருவள்ளூர் 2வது இடத்தில் உள்ளது. திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.