தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், மக்கள் அதை கடைபிடிக்கவில்லை.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வீதமும், இறப்பு வீதமும் படிப்படியாக குறைந்து வருகிறது என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மற்றும் திருத்தணி பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
undefined
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்;- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், மக்கள் அதை கடைபிடிக்கவில்லை. அரசின் விதிமுறைகளை பின்பற்றாததால் தமிழகத்தில் இதுவரை 50 ஆயிரம் பேரிடம் 1.50 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஆரம்பத்தில் மருத்துவப் பரிசோதனையில் 15 முதல் 20 விழுக்காடு தொற்று பாதிப்பு உறுதியாகி வந்தது. தற்போது 10க்கும் கீழ் பாதிப்பு குறைந்துள்ளது. மாநிலத்தில் பாதிப்பு வீதமும், இறப்பு வீதமும் படிப்படியாக குறைந்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்திருந்தாலும், கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமானதால், சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து தீவிர சிகிச்சையின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் அடுத்ததாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என வாட்ஸ் ஆப்பில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.