அரசு பேருந்துகளில் எச்சில் தொடாமல் டிக்கெட் கொடுங்க... கண்டக்டர்களுக்கு அதிரடி உத்தரவு..!

By vinoth kumarFirst Published Mar 20, 2020, 5:53 PM IST
Highlights

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பேருந்து, ரயில் நிலையங்களில் கிருமிநாசினி மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், வெளிமாநிலங்களுக்கு சென்று வருவதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், பேருந்து, ரயில்களில் கூட்டம் குறைந்துள்ளது. இருப்பினும் தவிர்க்க முடியாத காரணங்களாலும்,  அத்தியாவசிய தேவைக்காகவும், சிலர் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் விழுப்புரம் கோட்ட அரசு பேருந்துகளில் எச்சில் தொடாமல் பயணிகளுக்கு டிக்கெட் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பேருந்து, ரயில் நிலையங்களில் கிருமிநாசினி மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், வெளிமாநிலங்களுக்கு சென்று வருவதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், பேருந்து, ரயில்களில் கூட்டம் குறைந்துள்ளது. இருப்பினும் தவிர்க்க முடியாத காரணங்களாலும்,  அத்தியாவசிய தேவைக்காகவும், சிலர் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் விழுப்புரம் கோட்ட அரசு பேருந்துகளில் கண்டக்டர் சிலர் நாக்கு எச்சிலை தொட்டு டிக்கெட் கிழித்து பயணிகள் கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனா வைரஸ் பீதியில் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கண்டக்டர்கள் கொடுக்கும் எச்சில் டிக்கெட் மூலம் பரவும் அபாய நிலை உள்ளது. கண்டக்டர்களும் சுகாதாரம் காப்பதில்லை. 

இது குறித்து வந்த புகாரை அடுத்து விழுப்புரம் கோட்ட போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறுகையில் அரசு பேருந்துகளில் பொறுத்தவரை வெளியூர் பேருந்துகளில் எலக்ட்ரானிக் டிக்கெட் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிலர் வெளியூர் பேருந்துகள் மட்டும் டவுன் பஸ் டிக்கெட் இயந்திரங்கள் இல்லை, இருந்தாலும் எச்சில் தொடாமல் டிக்கெட் வழங்க கண்டக்டர்களும் அறிவுரை வழங்கி உள்ளோம் என்றார்.

click me!