நாமக்கல் மாவட்டம் ராமாபுதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி திருமங்கை (33). இவர்களுக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில், திருமங்கை வெள்ளகோவில் அருகே உள்ள அமராவதி ஆற்றின் கரையோரம் புதரில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல் அருகே இளம்பெண் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராமாபுதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி திருமங்கை (33). இவர்களுக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில், திருமங்கை வெள்ளகோவில் அருகே உள்ள அமராவதி ஆற்றின் கரையோரம் புதரில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளம்பெண் திருமங்கை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
undefined
இறந்த பெண்ணின் கையில் எம்.எம். என்றும் மார்பு பகுதியில் ஆடம்ஸ் என்றும் பச்சை குத்தி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மனைவி திருமங்கை கொலை குறித்து அவரது கணவர் ரமேசுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். உறவினர்களும் அங்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உறவினர்களுடன் கோவிலுக்கு சென்றதும், பிறகு சித்தி மற்றும் சித்தி மகள் அவர்களது வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு சென்றதும் தெரியவந்தது. பின்னர், வீடு திரும்பிக்கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
மார்பு பகுதியில் ஆடம்ஸ் என்று பச்சைகுத்திய உள்ள நபர் யார் என்றும், அவரை யாராவது கடத்தி வந்து பலாத்காரம் செய்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.