செல்போனில் ஒரு டச் போதும்..! பயிர்களுக்கு தேவையான தண்ணீர் பாய்ந்து வரும்..! விவசாயிகளுக்கு உதவ புதிய நடைமுறை அறிமுகம்..!

By Manikandan S R S  |  First Published Oct 2, 2019, 4:12 PM IST

உடுமலை அருகே ரெட்டியாபாளையம் பகுதியில் பருவ நிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு மற்றும் பருவமாற்றத்தை கணக்கிட்டு தண்ணிர் பாய்ச்சும் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ரெட்டிபாளையத்தில் பருவ நிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு மற்றும் பருவ நிலைக்கு தக்கவாறு தண்ணீர் பாய்ச்சும் கருவி அறிமுகபடுத்தும் விழா நடைபெற்றது

Tap to resize

Latest Videos

undefined

இதில் செல்போன் மூலம் வீட்டிலோ வெளியிலோ இருந்து கொண்டு பருவ நிலை மாற்றத்தை தெரிந்துகொண்டு தண்ணீர் பாய்ச்சும் கருவியை இயக்கி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது குறித்து முன்னால் அமைச்சர் சண்முகவேலு மற்றும் மடத்துக்குளம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் முன்னிலையில் விவசாயிகளுக்கு எக்ஸோ கார்டெக்ஸ் நிறுவன மேலாளர் அசோக் தலைமையில் செயல்விளக்கம்  செய்து காண்பிக்கபட்டது.

இது குறித்து எக்ஸோகார்டெக்ஸ் நிறுவனத்தினர் கூறுகையில் அடிக்கடி மாறும் பருவ நிலை மற்றும் தண்ணீர் தட்டுபாட்டால் குறிபிட்ட பயிர்களுக்கு எத்தனை நாட்களுக்கு எத்தனை முறை எவ்வளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டுமென்று சரியான கணக்கீடு இல்லாமல் விவசாயிகள் சிரமபட்டு வருகின்றனர். இதனால் விவசாய பணி மிகவும் கடினமாகிறது.

இதனை போக்கும் வகையில் பருவ நிலை மாற்றத்தை தானே கணக்கிட்டு தேவையான அளவு தண்ணீரை தேவையான நேரத்தில் தானாகவே பாய்ச்சிகொள்ளும் வகையில் இந்த  கருவி வடிவமைக்கபட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் நேரம் மிச்சப்படுவதோடு தண்ணீர் வளம் சேமிக்கபடுகிறது என கூறினர்.

செல்போனில் ஒரு முறை டச் செய்வதின் மூலம் தானாக தண்ணீர் பாய்ச்சி தானாக நிறுத்தி கொள்ளும் வகையில் வடிவமைக்கபட்ட கருவியை விழாவிற்கு வந்திருந்த விவசாயிகள் வியந்து பாராட்டினர்.

click me!